Kanchipuram

News March 27, 2024

குன்றத்தூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(44). இவரது குடிசை வீடு நேற்று(மார்ச் 26) மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 கிராம் தங்கம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2024

காஞ்சிபுரம்: கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயில் குளத்தில், நேற்று(மார்ச் 26) 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2024

தேர்தல் காவல் பார்வையாளர் உடன் ஆலோசனை கூட்டம்

image

இன்று (26.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் (காவல் பார்வையாளர்) பரத்ரெட்டி பொம்மாரெட்டியுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: 708 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

image

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் கடந்த மாதம் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கரீஷ் சதீஷ் ரெட்டி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 708 கிராம் தங்க நகைகள், 36 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

காஞ்சிபுரம் அருகே தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

image

2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: தொடங்கியது 10ம் வகுப்பு தேர்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 66 தேர்வு மையங்களில் 15,953 மாணவ மாணவிகள் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: திடீர் கலெக்டரால் சலசலப்பு!

image

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 25) நடைபெற்ற மனு தாக்கலின்போது, விநோத சம்பவம் ஒன்று அரங்கேறியது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ஒருவர், நான்தான் கலெக்டர், என்னிடமே மனு கொடுக்க வேண்டும் எனக்கூறி நாற்காலியில் அமர்ந்துள்ளார். விசாரித்ததில், அவர் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி என்பது தெரியவரவே, அவரை வேறு அறையில் அமர வைத்தனர். சற்று நேரத்தில் அவராகவே எழுந்து வெளியே சென்றுள்ளார்.

News March 26, 2024

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 24) வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.

News March 25, 2024

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 பேர் வேட்புமனுக்களை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.

News March 25, 2024

காஞ்சிபுரம்: திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்,தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைச்செல்வி மோகனிடம் இந்தியா கூட்டணி கட்சி திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் க.செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!