Kanchipuram

News July 11, 2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

காஞ்சிபுரம், ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் 26 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாயும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாயும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News July 10, 2024

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்

image

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் www.tnwidowwelfareboard.tn.gov.in இணையத்தில் உறுப்பினர்கள் சேர்ந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News July 10, 2024

‘கல்பனா சாவ்லா விருது’ – ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு, சமூக நலத் துறையின் சார்பில், 2024ஆம் ஆண்டிற்கான “துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா” விருது வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடைய பெண்கள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) மூலம் வரும் 15ஆம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News July 10, 2024

காஞ்சிபுரம்: 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சோமங்கலம் ஊராட்சியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தும் நாப்கின் உற்பத்தி கூடத்தினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

News July 9, 2024

காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம்

image

காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே, வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தீர்மானம் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கோவை, நெல்லை மேயரை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்கொடி ஏற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை முகாம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டுகிறது. சென்னை மாநகர பேருந்து பயண அட்டை தவிர்த்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி, பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களுக்கு செல்பவர்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான முகாம் வரும் 18.07.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஒத்திவைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் மாதம்தோறும் நடைபெற்று வந்தது. தற்போது, நிர்வாக காரணமாக மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் 11.07.2024 மற்றும் 18.07.2024 முதல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 9, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் 11.07.2024 முதல் 22.08.2024 வரை 256 கிராம ஊராட்சிகளில் 54 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தை 11.07.2024 அன்று முதலமைச்சர் தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, குன்றத்தூர் வட்டம் கோவூர் ஊராட்சியில் தனலட்சுமி மஹாலில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் முகாமை தொடங்கி வைக்கிறார் என மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார்.

News July 9, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 8, 2024

தொழில் தொடங்க கடன்; ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!