India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்,தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைச்செல்வி மோகனிடம் இந்தியா கூட்டணி கட்சி திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் க.செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி மோகனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் மாவட்ட செயலாளர்கள் வி.சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மாநில அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வாலாஜாபாத் அருகே லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வ/45 செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர். இவர் வழக்கம் போல் பணிக்கு இன்று காலை சைக்கிளில் வாரணவாசி பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிராமணர் அல்லாதவர் தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என மிரட்டும் தென்கலை பிரிவு பிராமணர்கள் குற்றச்சாட்டு. மேலும் தென் கலை பிராமணர்களின் செயலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து முகம் சுளிப்பு ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் நிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் அளித்து விசாரணை மேற்கொண்டதில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வீரவேல் மற்றும் கருணாகரனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் ஆறு சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதியில் திமுக சார்பில் செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் என 4 முனை போட்டியாக காஞ்சிபுரம் தொகுதி களம் காண்கிறது. நான்கு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.