Kanchipuram

News July 12, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் படித்துவிட்டு வேலையற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு

image

செல்வப்பெருந்தகை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறு பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அதன் ஒருபகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நேற்று 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 12, 2024

காஞ்சியில் கோடை உற்சவம் கோலாகலம்

image

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 3 ஆம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி தனியாகவும், வரதராஜ பெருமாள் தனியாகவும் ஆபரணங்கள் மட்டும் அணிந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க குடை சூழ ஏகாந்த சேவை வந்தனர். தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News July 11, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 11, 2024

காஞ்சி ஆட்சியருக்கு பிடிவாரண்டு: நீதிமன்றம் அதிரடி

image

TNPSC தேர்வு செய்த அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்படி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைமீறி காஞ்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து 3 மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் வரும் ஜுலை 27 அன்று ஆட்சியர்கள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

News July 11, 2024

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

காஞ்சிபுரம், ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் 26 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாயும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாயும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News July 10, 2024

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்

image

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் www.tnwidowwelfareboard.tn.gov.in இணையத்தில் உறுப்பினர்கள் சேர்ந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News July 10, 2024

‘கல்பனா சாவ்லா விருது’ – ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு, சமூக நலத் துறையின் சார்பில், 2024ஆம் ஆண்டிற்கான “துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா” விருது வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடைய பெண்கள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) மூலம் வரும் 15ஆம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News July 10, 2024

காஞ்சிபுரம்: 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.68.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சோமங்கலம் ஊராட்சியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தும் நாப்கின் உற்பத்தி கூடத்தினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

News July 9, 2024

காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம்

image

காஞ்சிபுரம் திமுக மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே, வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தீர்மானம் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கோவை, நெல்லை மேயரை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்கொடி ஏற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!