Kanchipuram

News July 13, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிக்குள்ளாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை

image

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் & மருத்துவ சிகிச்சையின் பொருட்டு விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களுக்கு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை பெற்றிட 18ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிக்குள்ளாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அறிவிப்பு

image

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 16.07.2024 அன்று நடைபெற உள்ளது. இதில், வாலாஜாபாத், அய்யன்பேட்டை ஊராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், உத்திரமேரூர், சாலவாக்கம் ஊராட்சியில், சாலவாக்கம் மேல்நிலைப்பள்ளியிலும், திருப்பெரும்புதூர், தண்டலம் ஊராட்சியில், தண்டலம் ஊராட்சி அலுவலகத்திலும், பெரியபணிச்சேரி ஊராட்சியில் சக்தி பேலஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார்

News July 13, 2024

காஞ்சிபுரம் மழைப்பதிவு விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று மழை பெய்தது. இதில், உத்திரமேரூர் பகுதியில் 6.6 செ.மீட்டர் மழையும் , காஞ்சியில் 4.6 செ.மீட்டரும், வாலஜாபாத்தில் 4.3 செ.மீட்டரும், ஸ்ரீ பெரும்புதூரில் 3.6 செ.மீட்டரும், செம்பரபாக்கம் பகுதியில் 3.6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தமாக 25.7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News July 12, 2024

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31 வரை நீட்டிப்பு

image

இந்திய தலைமை பிறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 01.01.2000க்கு முன்பு பிறந்தவர்கள் 2000ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு 15 ஆண்டுகள் என 31.12.2024ஆம் ஆண்டு வரை பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News July 12, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கல்வி கடன் மேளா நடத்துவது குறித்தான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், முன்னோடி வங்கி மேலாளர் அ.திலீப், வங்கி அலுவலர்கள், கல்வி நிலையங்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

News July 12, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் படித்துவிட்டு வேலையற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு

image

செல்வப்பெருந்தகை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறு பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அதன் ஒருபகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நேற்று 30 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 12, 2024

காஞ்சியில் கோடை உற்சவம் கோலாகலம்

image

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 3 ஆம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி தனியாகவும், வரதராஜ பெருமாள் தனியாகவும் ஆபரணங்கள் மட்டும் அணிந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க குடை சூழ ஏகாந்த சேவை வந்தனர். தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!