India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19.07.2024 அன்று காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல நடிகை கௌதமியின் நிலத்தை சென்னையைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் அபகரித்து ரூபாய் 25 கோடி மதிப்பு ஏமாற்றியதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் அழகப்பன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “வரும் 19 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை இன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஆர்.சி.எம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து தொடங்கி வைத்தார், இதில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பதிவாகும் மழையளவு சராசரியாக கணக்கிட்டு, மழையின் அளவு பதியப்படும். அதன்படி, தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் மாதம் முதல், ஜூலை 13 ஆம் தேதி வரை கணக்கீடு செய்ததில், 11.1 செ.மீ., மழை சராசரியாக பெய்திருக்க வேண்டும். ஆனால், அதிகமாக, 31.0 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக, மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 6,145 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 20 தேர்வு மையங்களில் மொத்தம் 4,523 பேர் எழுதினர். சுமார் 1622 பேர் எழுதவில்லை. தொடர்ந்து, காஞ்சி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.