India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்துாரில் இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘யூனிக் பெஸ்ட் கன்ட்ரோல்’ நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அதன் அலுவலகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகள் ‘சீல்’ நேற்று வைத்துள்ளனர். பின்னர், “இம்மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். மருந்து வைக்கப்பட்டபின், வீட்டில் யாரும் தங்க வேண்டாம்” என அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய இன்று (நவ.17) 2ஆவது நாளாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க உள்ளிட்ட சேவைகளைப் பெற அப்பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல், நேற்று திறக்கப்பட்டு கோவில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலையில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வாயிலாக எண்ணப்பட்டது. இதில், 21 லட்சத்து 60,633 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 1,077 கிராம் வெள்ளியும் என கோயிலுக்கு வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விதைகள் சுற்றுசூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4ஆவது ஆண்டில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திருமுக்கூடல் செய்யாற்றங்கரையோரம், நேற்று (நவ.16) 5,000 பனை விதைகள் நடவு செய்து, 4ஆம் ஆண்டுக்கான நிறைவு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 இருசக்கர வாகனங்கல் மற்றும் 1 லாரி என 28 வாகனங்களும் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனத்தை ஏலம் எடுப்போர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சியிலும் அய்யம்பேட்டையிலும் உள்ள நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது குறைகளை பூர்த்தி செய்ய சென்னை அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளதாகவும், மழைக்காலங்களில் நெசவு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், ஊக்கத்தொகைகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய காஞ்சி ஜவுளி மற்றும் நூல் துறை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏகனாபுரம் கோயில் அருகே பசுமை விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘பசுமை விமான நிலையத்திற்கு விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை வழங்க மாட்டோம்’ என்ற கோஷங்களை எழுப்பினர்.
குன்றத்தூரில் எலி தொல்லை காரணமாக தனியார் நிறுவனம் மூலம் வீட்டில் எலி மருந்து அடித்த விவகாரத்தில் 2 குழந்தைகள் பலியானார்கள். கணவன், மனைவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீட்டிற்கு வந்து எலிமருந்து அடித்துவிட்டு சென்ற ஊழியரை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கோவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமினை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஜ.சரவணக்கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
குன்றத்துார், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த பெஸ்ட் கன்ட்ரோலர் எனும் நிறுவனம் மூலம் வாங்கிய மருந்தில் வெளியேறிய நெடிகளால் அவரது மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். தற்போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா சிகிச்சை பெறுகின்றனர். 3 இடங்கள் மட்டுமே வைக்க வேண்டிய மருந்தை 12 இடங்களில் வைத்ததால் இந்த துயரம் ஏற்பட்டது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.