India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் க.மு.சுப்புராய முதலியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடங்களை இன்று காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்வில் எம்.எல்.ஏ எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த எட்டியாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில், பூந்தமல்லி பட்டாலியன் படை பிரிவில் பணியாற்றும் காவலர் தனுஷ்(24) என்பவர் நண்பர்களுடன் நேற்று குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தனுஷ் நீரில் மூழ்கி பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் தனுஷ் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓவியர் கணேசன் பைந்தமிழ் எழுத்துக்களால் பல பிரபலங்களின் உருவத்தை வரைந்து பாராட்டு பெற்று புகழ் பெற்றவர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை பைந்தமிழ் எழுத்துக்களால் வரைந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் ஓவியர் கணேசனை நேரில் அழைத்து பார்த்திபன் பாராட்டு தெரிவித்தார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது <
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை கௌதமி திருவள்ளூர் மாவட்டத்தில், தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான 46 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்றதாக கூறி தனது முன்னாள் மேலாளர் அழகப்பன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த அழகப்பனை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை வேளச்சேரி வீட்டில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
Sorry, no posts matched your criteria.