Kanchipuram

News July 20, 2024

மாவட்ட தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் மொத்த செலவு ரூபாய் 94 லட்சமாகும். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சென்று இனிப்பு வழங்கினார்.

News July 20, 2024

ரூ.22 இலட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உடன் இருந்தனர்.

News July 20, 2024

வேலைவாய்ப்பு முகாமில் 51 நபர்கள் உடனடியாக தேர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை நிறுவனங்களை சேர்ந்த மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். நேர்காணலில் பங்கேற்ற 51 நபர்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இணை இயக்குனர் அருணகிரி அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News July 20, 2024

காஞ்சிபுரத்தில் பிற்பகல் 1 மணி வரை மழை

image

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் அதன்படி, காஞ்சிபுரம், பரந்தூர், ஸ்ரீபெரும்பதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

வங்கியில் செவ்வாய் கிழமை தோறும் கடன் வழங்கும் விழா

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளிலும் செவ்வாய் கிழமை தோறும் பொது மக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 60 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் கடன் உதவி வழங்கி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலர் இதனை தெரிவித்தார். கடன் உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறினார்

News July 19, 2024

தமிழ் புதல்வன் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பின்னணியிலிருந்து அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயர்கல்வியைத் தொடர இருக்கும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைந்து உயர்கல்வியை உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 19, 2024

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக https://tamilvalarchithurai.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்/தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 19, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

விவசாயிகளுக்கு வேளாண் கடன் வழங்கினர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விவசாயிகளுக்கு இன்று(ஜூலை 19) வேளாண் கடன்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஶ்ரீ உடன் இருந்தனர்.

News July 19, 2024

புதுமைப்பெண் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் மட்டும் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் மூலம் பயனடைந்தனர். இந்நிலையில், 2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் சேர்ந்து பயன் வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!