Kanchipuram

News July 23, 2024

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

image

சென்னையின் 2ஆவது விமான நிலையத்தை பரந்தூரில் ரூ.32,704 கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழ்நாடு தொழில்பகுதி மேம்பாட்டு நிறுவனம் மத்திய அரசின் அனுமதி கோரியது. அதுகுறித்து விமான நிலைய ஆணையம், விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆலோசித்தன. பின்னர் அதை ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க, அக்குழு 9ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

News July 23, 2024

Budget: காஞ்சிபுரத்தில் என்னென்ன எதிர்பார்ப்பு

image

காஞ்சிபுரம் – செய்யாறு இடையேயான புதிய ரயில் பாதை திட்டம். ஸ்மால் சிட்டி திட்டத்தில் காஞ்சிபுரம் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, காஞ்சி மாவட்டத்திற்கு என சுற்றுலா திட்டம் அறிவிக்க வேண்டும். செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம் இடையே உள்ள ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும். ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதித்திட்டத்திற்கு ரூ.800 கோடி தேவைப்படுகிறது.

News July 23, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை

image

காஞ்சிபுரத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீபெரும்புதுார், சரோஜினி நகர், ராஜிவ்காந்தி நகர், சரளா நகர், தாம்பரம் சாலை, பாலாஜி நகர், கச்சிப்பட்டு, டி,கே. நாயுடு நகர், வல்லக்கோட்டை, மேட்டுப்பாளையம், காசா கிராண்ட், போந்துார், தெரசாபுரம், பிள்ளைப்பாக்கம், தத்தனுார், வளத்தான்சேரி, கடுவஞ்சேரி, கண்ணந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News July 22, 2024

அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் கைப்பேசி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் கைப்பேசியை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. வெங்கடேஷ் இருந்தனர்.

News July 22, 2024

‘கலைஞர் நூற்றாண்டு’ பேச்சுப் போட்டிக்கு கடைசி நாள்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி தி.மு.க இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

உதயநிதியை விளாசிய எச்.ராஜா

image

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால், தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார். நேற்று காஞ்சியில் பேசிய அவர், “உதயநிதி வேளச்சேரியில் தனியார் பள்ளி வைத்துள்ளதால், மாணவர்களிடம் பள்ளி கட்டணமாக வாங்க முடியாது என்பதால்தான் சனாதனத்தை எதிர்த்து பேசி வருகிறார். ஆகையால் தான் சனாதானத்தை கொசு, டெங்கு போன்றவை போல் அழிக்க வேண்டும் என பேசிக்கொண்டு வருகிறார்” என்றார்.

News July 21, 2024

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

image

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற ஜுலை.19 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜுலை. 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு www.incuicm.com என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044 27237699 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 20, 2024

மாவட்ட தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் மொத்த செலவு ரூபாய் 94 லட்சமாகும். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சென்று இனிப்பு வழங்கினார்.

News July 20, 2024

ரூ.22 இலட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உடன் இருந்தனர்.

News July 20, 2024

வேலைவாய்ப்பு முகாமில் 51 நபர்கள் உடனடியாக தேர்வு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை நிறுவனங்களை சேர்ந்த மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். நேர்காணலில் பங்கேற்ற 51 நபர்கள் உடனடியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இணை இயக்குனர் அருணகிரி அவர்களால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

error: Content is protected !!