Kanchipuram

News July 25, 2024

பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை

image

காஞ்சிபுரத்தில் உள்ள மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதில், மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Reeling, Weaving, Wet processing போன்ற பணிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு வரும் 25ஆம் தேதி நடைபெறும். சம்பளம்: ரூ.21,000 வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>.

News July 25, 2024

காஞ்சிபுரம் எம்எல்ஏ வுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை

image

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சென்னை அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

News July 24, 2024

கூட்டுறவு துறை சார்பில், ரூ.1 கோடி வங்கி கடனுதவி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில், கூட்டுறவு துறை சார்பில், ரூ.1 கோடியே 42 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா. மோ. அன்பரசன் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News July 24, 2024

பட்டு தொழில் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 25 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்ட பணிகளில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளம் ரூ.21,000 வரையறுக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

அஞ்சல் துறையில் வேலை: 96 காலிப் பணியிடங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. கிளை போஸ்ட் மாஸ்டர் (23), டாக் சேவாக் (4), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (69) என மொத்தம் 96 பணியிடங்கள் இதில் நிரப்படவுள்ளன. 18 முதல் 40 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு ஆக.5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. இதற்கு, ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எந்தவித எழுத்து தேர்வும், நேர்காணலும் இல்லை.

News July 24, 2024

காஞ்சி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரும் 29ஆம் தேதி மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. கமிஷனர் செந்தில்முருகனை நேற்று முன்தினம் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். கடுமையாக வாக்குவாதம் செய்த நிலையில், பந்தல் போட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

News July 23, 2024

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் நடைபெறும் இடங்கள்

image

‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ நாளை (ஜூலை 24) வாலாஜாபாத் அடுத்த களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள கஜாமினி பார்டி ஹால், உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், திருப்பெரும்புதூர் அடுத்த எறையூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகம் ஆகியவற்றில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 23, 2024

இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வான்மதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக பணி மாற்றம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த குமரத்துறை, காஞ்சிபுரம் இணை ஆணையராக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News July 23, 2024

முதிர்வுத்தொகை பெற ஆட்சியர் தகவல்

image

காஞ்சிபுரத்தில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளில், தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத்தொகை பெறப்படாமல் உள்ள பெண் குழந்தைகள், பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட உள்ளது. மேலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!