Kanchipuram

News July 26, 2024

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

image

காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிரான வாக்கெடுப்புக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்த கூடாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மேயர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக இருப்பதாகக் நீதிபதி தெரிவித்தார்.

News July 26, 2024

மேயர் கணவரின் ஆதரவாளர்கள் இருவர் நீக்கம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ், மாநகராட்சியில் நிர்வாகத்தில் தலையிடுவதாக 33 கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிலையில, நேற்று நடைபெற்ற தலைமை பேச்சுவார்த்தையில், கவுன்சிலர் குற்றச்சாட்டின் பேரில் கணவரின் ஆதரவாளரான பிரகாஷ் மற்றும் டெல்லி குமார் ஆகிய இருவரையும் திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

News July 26, 2024

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்ச்செம்மல் விருது பெற வரும் ஆக.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆா்வலா்களை கண்டறிந்து அவர்களுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட உளள்து. அவருக்கு, ரொக்கமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. தகுதியுடையவா்கள் <>இணையத்தில் <<>>அல்லது தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News July 26, 2024

காஞ்சிபுரம் மேயர் பதவி பறிக்கப்படுமா?

image

காஞ்சிபுரம் மாவட்ட மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, திமுக உள்ளிட்ட 36 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, நேற்று சமாதான பேச்சுவார்த்தை திமுக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், வரும் 29ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், மேயர் பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது.

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும் இடங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அவலூர் துளசி மஹாலில் (26/7/24) காலை 9 மணி முதல் அங்கம்பாக்கம், அவலூர், ஆசூர், காம்மராஜபுரம்,  தம்மனூர், இளையனூர், வேலூர், காமந்தண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு நடைபெறவுள்ளது.

News July 25, 2024

மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

image

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

News July 25, 2024

2026இல் பரந்தூர் விமான நிலையப் பணி தொடங்கும்

image

சென்னை அடுத்த மிகப்பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5368 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. சமீபத்தில் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டமைப்பு பணி தொடங்கும் என்றும், 2029ஆம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்படும் என்றும் டிட்கோ நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.

News July 25, 2024

காஞ்சியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஜூலை 25) மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், காஞ்சியில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

காஞ்சிபுரம் இட்லி உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்?

image

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணிநேரம் ஊறவைத்து, அவற்றை மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். மாவு புளிக்க வேண்டும். அது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடாயில் நெய் ஊற்றி, அதில் கடுகு, முந்திரி, உளுத்தம் பருப்பு, சுக்கு பொடி, சீரகம், பெருங்காயத்தூள், மிளகு, கருவேப்பிலை போட்டு வதக்கி, அதனை இட்லி மாவில் கலந்து வழக்கம் போல் இட்லி சட்டியில் அவிக்க வேண்டும்.

News July 25, 2024

பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை

image

காஞ்சிபுரத்தில் உள்ள மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இதில், மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Reeling, Weaving, Wet processing போன்ற பணிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு வரும் 25ஆம் தேதி நடைபெறும். சம்பளம்: ரூ.21,000 வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>.

error: Content is protected !!