India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி செய்யப்பட்டுள்ளது. மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய திமுக கவுன்சிலர்கள் 22 பேர், நேற்று சொகுசு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தீர்மானம் நிறைவேற்றபட இருந்த நிலையில், 12 மணி வரை யாரும் வராததால் ஆணையர் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், மகாலட்சுமி மேயராகவே தொடர்வார்.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நடைபெறவிருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்த கவுன்சிலர்கள் யாரும் இதுவரை வரவில்லை. மேயருக்கு எதிரான திமுக உள்ளிட்ட கன்வுசிலர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில், நேற்று திமுக கவுன்சிலர்கள் 22 பேர் சுற்றுலா சென்றதால், இன்று வாக்கெடுப்பு நடக்குமா? என்று தெரியவில்லை.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நடைபெற இருந்த நிலையில், தற்போது வாக்கெடுப்பு ரத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. திமுக உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, வழக்குகளுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், நேற்று கவுன்சிலர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் சென்றதால், மேயர் பதவி பறிக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த குறை கேட்பு கூட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறை கேட்பு கூட்டம் வருகிற 30.7.2024 காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படவிருக்கிறது. இதன் படி 51 கவுன்சிலர்களில் 41 பேர் வாக்களிக்க வேண்டும். இதில் மேயருக்கு ஆதரவாக 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு எதிராக இருந்த 33 கவுன்சிலர்களில் 15க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்களை அவர்கள் குடும்பத்துடன் நேற்று மாலை சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். இதனால் தீர்மானம் மேயருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.
காஞ்சிபுரத்தின் மேயராக உள்ள மகாலட்சுமியின் கணவர் யுவராஜின் ஆதிக்கம் நிர்வாகத்தில் அதிகம் உள்ளதாக அதிர்ச்சியடைந்த 33 கவுன்சிலர்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தடையில்லை என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன் படி மேயர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை(ஜூலை 29) நடைபெறவிருக்கிறது. மேயரின் பதவி காப்பாற்றப்படுமா? உங்களின் கருத்துகளை பதிவிடவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று(26/7/24) மாலை 5 மணி அளவில், காஞ்சிபுரம் அமமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக கரிகாலனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இதை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கரிகாலனுக்கு அமமுகவினர் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த டி.டி.வி வழிமுறைகள், ஆலோசனைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் குரூப் 2 தேர்வில் வருவாய் துறை அலகில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் இலவச வீட்டு மனை பட்டாவை கணக்கு பதிவேட்டில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். இதற்காக, கிராம நிர்வாக அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.