Kanchipuram

News May 11, 2024

பயணிகள் ரயில் மறியல் செய்ததால் பரபரப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய ரயில் நிலையத்தில் சென்னை பீச் வரை செல்லும் மின்சார தொடர் வண்டியில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோது ரயில் புறப்பட்டதால் 3 பயணிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் முன்பு நின்று கொண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News May 11, 2024

காஞ்சியில் வசமாக சிக்கிய திருடன்

image

சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போலீசார் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகம்மதுபேட்டை பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News May 11, 2024

காஞ்சிபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

காஞ்சிபுரம்: ஜூலை 2-ல் துணைத் தேர்வு!

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு நாளை நடைபெறுகிறது

image

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரிக் கனவு என்னும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (11.05.2024)  மேற்கு தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலந்துகொண்டு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல் பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News May 10, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிறப்பு!

image

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் தேவாரம் பாடப்பெற்றத் தலமாகும். பல்லவர்களின் கட்டடக் கலையை பற்சாற்றும் விதத்திலேயே இக்கோவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் 700ஆம் ஆண்டுகளுக்கு முன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டு, 14 ஆம் நூற்றாண்டின் மீண்டும் இக்கோயில் சீரமைக்கப்பட்டது. பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலிலும், துணைக்கோயிலிலும் பல ஓவியங்களும், சிலைகளும் காணப்படுகின்றன.

News May 10, 2024

காஞ்சிபுரம் 33ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 83.63% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.22 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.18 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

10th RESULT: காஞ்சிபுரத்தில் 87.55% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.05% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.18% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து தினம் தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோடைகாலத்தில் பொதுமக்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உதவியுடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!