India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள 3,99,499 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த செந்தில் முருகன் சென்னை மாநகராட்சியின் உட்கோட்ட அதிகாரியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி உட்கோட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த நவேந்திரன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்து வருவதால், குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குடை, ரெயின் கோர்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தென் அமெரிக்காவின் லிமா பெரு என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் கார்த்திகேயன் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேலாளர் சுஜாதா, காஞ்சி தடகள பயிற்சியாளர் தாஸ், காஞ்சி மாவட்ட தடகள சங்கத்தின் துணைத் தலைவர் விளையாட்டு வீரர் எஸ்.அரவிந்த் குமார் ஆகியோர் மாணவனை பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நேற்று (ஆகஸ்ட் 2) திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரான ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் கிஷோருக்கு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில செல்வதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல்வர், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கி பாராட்டினார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 67 ஏக்கரில் ரூ.1,800 கோடி செலவில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கிறது. ஆலை கட்டுமான பணிகளின்போது 200 பேருக்கும், தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு, நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக ரூ.11.36 லட்சம் செலவு செய்யப்பட்டது குறித்து நடிகை அனிதா சம்பத் அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இத்தகவல் தவறானது என்றும், நடைபாதை, படிக்கட்டு, நீர் வரத்து, மின் விளக்கு, சிமெண்ட் இருக்கைகள் என மொத்தம் ₹11 லட்சம் செலவிடப்பட்டதாக தமிழ்நாடு Fact Check விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.