India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கியும், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிதியுதவிகளாக 2 பயனாளிகளுக்கு ரூ.3,000/- மதிப்பிலான மூக்கு கண்ணாடியும், 10 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி உட்பட 24 பயனாளிகளுக்கு ஆட்சியர் ரூ.1.47 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் எதிரே உள்ள மண்டபம் அருகே நெசவாளர் அன்பு வசித்து வருகிறார். இவர் பல்வேறு வங்கியில் இருந்து கடன் பெற்று நெசவு தொழில் செய்து வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகளுக்கு பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் இயங்கி வரும் பட்டுப்பூங்காவை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கேட்டு தெரிந்துகொண்டனர். ஆஸ்திரேலியா நாட்டின் பொருளாதாரப்பிரிவு முதன்மை செயலாளர் ஜோய்வுட்லி தலைமையில் வந்திருந்த அதிகாரிகள் காஞ்சி பட்டின் தரம் மற்றும் வேலைபாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. விடிய விடிய மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி வரை (மதியம் 1 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று மாலை முதல் குன்றத்தூர், ஸ்ரீபெரும்பதூர், சிட்லபாக்கம், அரும்புலியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிப்படைந்ததோடு, சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது.
காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்துஸ்தான் பல்கலை., பகுதியில் மட்டும் 10செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 8செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சிட்லப்பாக்கம், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், உங்கள் நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க. ‘HAPPY FRIENDSHIP DAY’
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள 3,99,499 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.