Kanchipuram

News March 28, 2025

தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்படும் லேப்

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலமங்கலம் நடுநிலைப்பள்ளியில் GKN நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட STEM LAB யை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் மாணவ மாணவிகளின் பெட்ரோல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

News March 28, 2025

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்
படப்பை ஊராட்சி மேட்டு தெருவில் உள்ள அங்கன்வாடியில் சங்கரா கண் மருத்துவமனை மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் என்று நடைபெற்றது ஒன்றி குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் படப்பை ஊராட்சி பொதுமக்கள் பலர் பயன்பட்டனர்

News March 28, 2025

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களது பகுதியில் உள்ள நிறைகுறைகள் மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து விவாதம் மேற்கொண்டனர்.

News March 28, 2025

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

image

காஞ்சி மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் வியாழன் (27 மார்) தண்ணீர் பந்தலை காஞ்சி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் வாலாஜா பா. கணேசன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக கட்சி முன்னோடிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். திரளாகப் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News March 27, 2025

நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.28) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்த உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்கள்

News March 27, 2025

காஞ்சிபுரத்தில் இன்று வெயில் சதமடிக்கும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று வெயில் சதமடிக்கும் என்றும், குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்.27) அல்லது நாளை (மார்.28) அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவும் வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஆகையால், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 27, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 26, 2025

மிக அதிவேக மெட்ரோ ரயில் சேவை குறித்து ஆய்வு

image

3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் மண்டலப் போக்குவரத்து (ஆர்ஆர்டிஎஸ்) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் ஆராயப்பட உள்ளது. அதன்படி சென்னை – செங்கல்பட்டு – விழுப்புரம் வழியாக 167 கி.மீ, சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் வழியாக 140 கி.மீ., கோவை – திருப்பூர் – சேலம் வழியாக 185 கி.மீ. தொலைவுக்கு மித அதிவேக ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது

News March 26, 2025

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை

image

காஞ்சிபுரம் ஏனைகரன் உள்ள நாராயணா பாளையம் தெருவில் அமைந்திருக்கும் கோயிலில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் இன்று மார்ச் 26 புதன்கிழமை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பக்தர்கள் ராமர் பாட்டை பாடி மகிழ்ந்தார்கள் அங்கு பிரசாதமாக கேசரி கொடுக்கப்பட்டது

News March 26, 2025

காஞ்சிபுரம்: இழந்த பொருளை மீட்டு தரும் அற்புத ஆலயம்

image

திருமால்பூரில் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, திருமால் இழந்த தன் சக்ராயுதத்தையும், சந்திர பகவான் இழந்த தன் பொலிவையும் மீண்டும் அடைவதற்கு தவம் இருந்து, பலன் பெற்றனர். இங்கு வந்து சிவ தரிசனம் செய்து, சிவனாருக்கு தாமரைப்பூ, வில்வம், வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், இழந்ததை (பொருள், பதவி) விரைவில் பெறலாம் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க 

error: Content is protected !!