India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம், செவிலுமேடு, ஓரிக்கை, வாலாஜபாத், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காஞ்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2024) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு கடன் வசதிகளை ஊக்குவிக்கவும் இணை மானியத் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வரும் 14.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மகளிர் திட்ட அலுவலக இரண்டாவது மாடியில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் முகாம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சினிமா தொழிலாளர்களின், 9-ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-25 நிதி ஆண்டிற்கான உதவி பெற https://scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரின் ஆதரவு பெற்ற பணிகள் குழு தலைவராக இருந்த சுரேஷ், குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்ததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற பணிகள் குழு தலைவர் போட்டியில், மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் 48ஆவது வார்டு கவுன்சிலர் கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காந்தி ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது. இது, நாளை (ஆகஸ்ட் 7) முதல் 9ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அசல் பட்டு சேலை வகைகள் கண்காட்சிபடுத்த இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு அலுவலராக பணிபுரிபவர் சியாமளா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து, நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்று காலை 6 மணி முதல் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. 2023 டிசம்பரில் நடந்த கூட்டத்தின்போது தான் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின், மார்ச் மாதம் நடந்த அவசரக் கூட்டம் 2 முறை ரத்து செய்யப்பட்டது. இதனால், அடுத்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கியும், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிதியுதவிகளாக 2 பயனாளிகளுக்கு ரூ.3,000/- மதிப்பிலான மூக்கு கண்ணாடியும், 10 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி உட்பட 24 பயனாளிகளுக்கு ஆட்சியர் ரூ.1.47 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.