Kanchipuram

News August 8, 2024

தமிழக அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

image

காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் தனியாா் பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு தனி நபரும் தனியாா் பேருந்து நிலையங்களை உருவாக்க அனுமதி இல்லை என தர்மபுரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் வழக்குத் தொடர்ந்தார்.

News August 8, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

News August 7, 2024

தொழிற் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் 

image

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (TEXPO 2024) என்ற தொழிற் கண்காட்சியை நடத்துகிறது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அரசு செயலர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News August 7, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திருப்போரூர், ஸ்ரீபெரும்பத்தூர், உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

News August 7, 2024

காஞ்சிபுரத்தில் பதிவான மழை அளவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: காஞ்சிபுரம் – 22.22 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் -55 மி.மீ., உத்திரமேரூர் – 42.6 மி.மீ., வாலாஜாபாத் – 8 மி.மீ., குன்றத்தூர் – 77 மி.மீ., செம்பரம்பாக்கம் – 46.4 மி.மீ என மாவட்டம் முழுவதும் 251.20 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

News August 7, 2024

சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள்

image

அண்மையில், தாய்லாந்தில் 4ஆவது சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மடம் தெரு பகுதியில் அமைந்துள்ள காஞ்சி சிலம்பம் அகாடமி மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், காஞ்சிபுரம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 5 தங்கம், 5 வெள்ளி 2 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை வாழ்த்தலாமே!

News August 7, 2024

வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 4 பேர் பலியாகி உள்ளதாக காவல் காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளனர். தாமல் ஏரிக்கரை அருகே லாரி – கார் மோதிய விபத்தில் ராமச்சந்திரா, தனசேகரன், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் – பைக் மோதிய விபத்தில் வெங்கடேஷ், ஊத்துக்காடு அருகே சாலையை கடக்க முயன்ற மணி ஆகிய 4 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

News August 6, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் குறித்த அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் வட்டத்தில் கூரம், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிள்ளைப்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் மலையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

News August 6, 2024

பரந்தூர் விமான நிலையம் அமைய முழு காரணம் மாநில அரசு

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்கவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்தது. இதையடுத்து ஏகனாபுரம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதுடன், மத்திய விமான அமைச்சகத்திற்கு மறுபரிசீலனை செய்ய கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், விமான நிலைய அமைப்பதற்கும் முழு காரணம் மாநில அரசு என பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News August 6, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம், செவிலுமேடு, ஓரிக்கை, வாலாஜபாத், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

error: Content is protected !!