India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். பரந்தூர் திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரும் 15ஆம் தேதி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொள்ள இருப்பதாக பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா?
தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.
திருப்புக்குழி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் – துளசி தம்பதியின் 7 வயது குழந்தை நேசிகா, திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயநாடு நிலச்சரிவில் ஏராளமான உயிரிழந்ததோடு, பலரும் வாழ்வாதாரத்துக்கு போராடி வருகின்றனர். நேசிகா, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நேற்று தலைமையாசிரியரிடம் கொடுத்து வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.
திருப்புக்குழி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் – துளசி தம்பதியின் 7 வயது குழந்தை நேசிகா, திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயநாடு நிலச்சரிவில் ஏராளமான உயிரிழந்ததோடு, பலரும் வாழ்வாதாரத்துக்கு போராடி வருகின்றனர். நேசிகா, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நேற்று தலைமையாசிரியரிடம் கொடுத்து வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தில் நேற்று 10ஆவது தேசிய கைத்தறி தினவிழா நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ரக சேலைகளை உற்பத்தி செய்துவரும் 60 பேருக்கு நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.25 லட்சம், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 நெசவாளர்களுக்கு ரூ.36.70 லட்சம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.1200 மாத ஓய்வூதியத்திற்கான ஆணையை அமைச்சர் த.மோ.அன்பரசன் வழங்கினார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் தனியாா் பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு தனி நபரும் தனியாா் பேருந்து நிலையங்களை உருவாக்க அனுமதி இல்லை என தர்மபுரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
Sorry, no posts matched your criteria.