Kanchipuram

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. போக்குவரத்துக்கு நெரிசல், சாலையில் நீர்த்தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். மழை பெய்யுமா? பெய்யாதா?

News August 12, 2024

காஞ்சி பயிற்சி மையத்தில் பயின்ற 3 பேருக்கு அரசுப் பணி

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.சி நிலை இரண்டு மற்றும் இரண்டு ஏ – வில் இங்கு பயிற்சி பெற்ற 12 மாணவர்கள் தேர்வில் வெற்றினர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பணி நியமன ஆணை மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் அன்பரசன் வழங்கி சிறப்பித்தார்.

News August 12, 2024

காஞ்சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு நிதி உதவி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News August 12, 2024

காஞ்சியில் மார்க்கெட்டை திறந்து வைத்த அமைச்சர்

image

காஞ்சிபுரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இராஜாஜி சந்தையை காணொளி வாயிலாக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சந்தையை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் அவர் காய்கறி வாங்கினார்.

News August 12, 2024

காஞ்சிபுரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாமல்லபுரம், மதுராந்தகம், வாலாஜாபாத், படப்பை உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News August 11, 2024

காஞ்சிபுரம் கோவிலில் பிரபல யூடியூபர் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் இன்று கோவிலுக்கு வருகை தந்து காமாட்சி அம்மன் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் குருக்கள் குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். மாரிதாஸ் கண்ட ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News August 11, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.

News August 11, 2024

காஞ்சிபுரம் காய்கறி சந்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரத்தில் 1907-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்கெட் பின்னர், ராஜாஜி காய்கறி சந்தை என பெயர் மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் கடந்ததால் இருந்ததால் பழுதடைந்த இந்த காய்கறி சந்தை இடித்து முற்றிலும் அகற்றப்பட்டு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 248 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணெளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

News August 10, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையருடன் எம்.எல்.ஏ சந்திப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் நவேந்திரனை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன்பு இருந்த ஆணையர் செந்தில் முருகன் சென்னை மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6194 மாணவர்களுக்கு உதவிதொகை

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஏ.டி.எம் கார்டை வழங்கினார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,194 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக இதில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் 2,632 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

error: Content is protected !!