Kanchipuram

News August 14, 2024

காஞ்சிபுரத்தில் சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் 20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

ரூ.2,600 கோடி முதலீடு: 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு

image

44,125 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு நேற்று அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “காஞ்சிபுரத்தில் மதர்சன் எலட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.2,600 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், புனல் மின் திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு உள்ள திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

News August 14, 2024

தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே ஊதியத்தை சரியான தேதியில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி கொடுப்பதாகவும், ஊதிய உயர்வு கேட்டு பலமுறை முறையிட்டும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து, இன்று தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News August 14, 2024

20 துணை வட்டாட்சியர்கள் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் பலர், நீதிமன்றம் மற்றும் காவல் துறை பணிகளுக்கு பயிற்சிப் பெற்று 6 ஆண்டுகளாக வட்டாட்சியர் பதவிக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு வெளி மாவட்ட வட்டாட்சியர்களை நியமித்து வரப்படுகிறது. இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து துணை வட்டாட்சியர்கள் 20 பேர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE IT

News August 13, 2024

காஞ்சிபுரம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆக.17ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து திறந்து வைக்கிறார். உடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் ஆக.15ல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

image

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானம், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆக.15ஆம் தேதி நாள் முழுவதுமாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

நகராட்சியாக மாறும் ஸ்ரீபெரும்புதூர்

image

சுற்றுலா, தொழில் என முக்கியத்துவம் வாய்ந்த 10 பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை மக்கள் தொகை, ஆண்டு வருமானம் கருத்தில் கொண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல்வர் உத்தேச ஆணையை வெளியிட்டார். தலைமை செயலகத்தில் ஸ்ரீபெரும்புதூர், புதிய நகராட்சியை அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச ஆணையை நேற்று முதல்வர் வழங்கினார்.

News August 13, 2024

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், காஞ்சிபுரத்தின் 5 வட்டாரங்களில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 15ஆம் தேதி அந்தந்த ஊராட்சிகளின் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களின் கணக்குகளை பராமரிக்கவும், தணிக்கை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், தக்கோலம் அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும், 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!