India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரேமலதாவுக்கு பிரசாதம் மற்றும் சுவாமி புகைப்படம் அளித்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 42 மாதங்களில் 2952 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் நியாயவிலை கடையினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர். அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், இன்று (ஆக.16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்த 18 – 35 வயதுக்கு உட்ப்பட்டவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1.74 கோடிக்கு கையெழுத்தானது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு
ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில், 78ஆவது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார். மேலும், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நாளை (ஆக.16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்த 18 – 35 வயதுக்கு உட்ப்பட்டவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனிசமான மழைபொழிவு பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பொழிவு உள்ளதா?
காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.