Kanchipuram

News June 8, 2024

அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி வருகிது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News June 8, 2024

மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் இருக்கும் நிலையில் பெரும்பான்மையான 35 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். அதில் மேயர் கணவர் யுவராஜ் வார்டில் அடிப்படை தேவைகளை செய்ய விடாமல் தடுப்பதாக மனுவில் தெரிவித்தனர்.

News June 8, 2024

திமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், திருப்பெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட திமுக மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

காஞ்சிபுரத்தில் 9 செ.மீ மழைப்பதிவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாலாஜாபாத் பகுதியில் 9 செ.மீட்டரும், காஞ்சிபுரம், மீனம்பாக்கம் பகுதியில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 7, 2024

காஞ்சிபுரம் மாவட்ட மழையின் நிலவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மழையின் அளவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – 33.4 மி.மீ,
உத்திரமேரூர் – 13.0 மி.மீ, வாலாஜாபாத் – 80.0 மி.மீ, ஶ்ரீபெரும்புதூர் – 29.0 மி.மீ, குன்றத்தூர் – 22.2 மி.மீ பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 200.26 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

News June 7, 2024

காஞ்சிபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

வாலாஜாபாத் அருகே மின்னல் தாக்கி பலி!

image

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் பகுதி வசிக்கும் அப்பாதுரை மகன் இளங்கோ(41). இவர் நேற்று(ஜூன் 6) இரவு வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றபோது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இளங்கோவை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றநிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 7, 2024

காஞ்சி: மூட்டை மூட்டையாக குப்பைகளை எரிப்பதால் அவதி

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மண்மங்கலம் அடுத்த முடிச்சூர் செல்லும் சாலையில் சிலர் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொட்டி அங்கே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினந்தோறும் சுவாச பிரச்னையை சந்தித்து வருகின்றனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

News June 6, 2024

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.06.2024 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தோட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் பெருங்கோழி, வாலாஜாபாத் வட்டத்தில் நாயக்கன்குப்பம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிசேத்துப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

காஞ்சிபுரத்தில் 9 செ.மீ மழைப்பதிவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ARGயில் 9 செ.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 8 செ.மீட்டரும், குன்றத்தூரில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

error: Content is protected !!