Kanchipuram

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு

image

காஞ்சிபுரம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. செங்கல்பட்டு தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 97 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

உதயநிதியை சந்தித்து பேசிய அதிமுக கவுன்சிலர்

image

காஞ்சிபுரம் 20ஆவது வார்டு கவுன்சிலர் (ADMK) அகிலா தேவதாஸின் கணவர் திமுகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருவதால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று காஞ்சிபுரம் உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில், தேவதாஸ் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு இருவரையும் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால், மேயர் தரப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாரா? என்ற கோணத்திலும் தகவல்கள் பரவியிருந்தது.

News August 20, 2024

காஞ்சி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஜி.கே வாசன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூப்பனாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஷார் கிராம விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜி.கே. வாசன் வழங்கி சிறப்பித்தார். மற்றும் இரண்டு லட்சம் பனை விதை விதைத்த நபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.

News August 20, 2024

குன்றத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோவூரில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் உடனிருந்தார்.

News August 19, 2024

மாற்றுத்திறனாளி குழந்தையின் தாய்க்கு உடனடி உதவி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயார் வழங்கிய மனுமீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

காஞ்சியில் திரு பவித்ர உற்சவம் முதல் நாள் கோலாகலம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 தீப தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று திரு பவித்திர உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

News August 19, 2024

விபத்தில் மூளை சாவை அடைந்த இளைஞர் உடல் உறுப்பு தானம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் அருகே மொளச்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் இளங்கோ என்பவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. சிகிச்சை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தாரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2024

பரந்தூர் விமான நிலைத்திற்கு நிலம் எடுக்க அரசாணை

image

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், பரந்தூரில் 150 ஏக்கர், வளத்தூரில் 3 ஏக்கர், நாகப்பட்டில் 43 ஏக்கர் என நிலப் பகுதிகளை கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இருக்குமானால், தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 19, 2024

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு விருது

image

ஸ்ரீ பெரும்புதூரில் பெண் தொழிலாளா்களுக்காக ரூ.706 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினாா். விருதை, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.சிவமலா் பெற்றுக்கொண்டாா்.

error: Content is protected !!