India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (28.10.2024) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய மின்னணு நகல் குடும்ப அட்டை வேண்டி அளிக்கப்பட்ட மனு மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய மின்னணு நகல் குடும்ப அட்டையை, ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், புதிய பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு, மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கிய நிலையில், இத்திட்டத்திற்கு நிலம் அளவிடும் பணி இன்று தொடங்கியது. முதற்கட்டமாக இன்று (அக்.28) நாகப்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை அளவெடுக்கும் பணியானது நடந்து வருகிறது. புதிய விமான நிலையத் திட்டத்திற்கு தொடர் எதிர்ப்பு இருக்கும் சூழலில் அளவிடும் பணி நடக்கிறது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி இன்று (அக்.28) எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மா.சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் மற்றும் முன்னாள் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜீவானந்தம் மாலை அணிவித்து கௌரவித்தனர். இதில், தெற்கு பகுதி துணை செயலாளர் ஜீ.சரண்ஜீவா மற்றும் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஜீ.தமிழரசன் உடனிருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் அப்பல்லோ டயர்ஸ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 3 ஆண்டுக்கான ஊதிய உடன்பாட்டுடன் போனஸ், கருணை தொகை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் உடன்பாடும் எட்டப்பட்டது. இதனால், ஊழியர்களுக்கு ரூ.42,000 – ரூ.46,000 – ரூ.50,000 வீதம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
ஆந்திரா, நெல்லூரைச் சேர்ந்தவர் விஷ்ணு சாய்ராம் (19). இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்திலுள்ள பொறியியல் கல்லூரில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவரை ராகிங் செய்து வந்த 4ஆம் ஆண்டு மாணவர்கள், கடந்த 23ஆம் தேதி இவரை பைக்கில் அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். யாரிடம் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 6 பேர் மீது ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மத்திய, மாநில அரசு, வருங்கால வைப்பு நிதி திட்டம், ராணுவம் மற்றும் பிற ஓய்வூதியம் பெறுவோர் வரும் நவ.1ஆம் தேதி முதல் தங்களின் உயிர்வாழ்வு சான்றினை கருவூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால் துறை வாயிலாக டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்று பெறலாம் என காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியுள்ளார். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டிகேஸ்வரன். இவரது மனைவி கிரிஜா (42), செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். டிகேஸ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் வளர்ந்து வந்த நாய்க்குட்டிகள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கிரிஜா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது; இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை திமுக நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறவில்லை. சிறப்பாக ஊழல்தான் நடக்கிறது. தமிழ்நாடு திமுக ஆட்சியில் மோசமான நிலையில் உள்ளது.
காஞ்சிபுரத்தில், அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “திமுக அரசு பதவி ஏற்றத்திலிருந்து எந்த புதிய திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தருவதில்லை. அதிமுக ஆட்சியில் 36,000 போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தோம்” என குற்றம் சாற்றினார்.
Sorry, no posts matched your criteria.