Kanchipuram

News August 24, 2024

வரும் 28ஆம் தேதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

image

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.

News August 24, 2024

தொடர் விடுமுறையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்றிரவு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்படுதல், காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றன.

News August 23, 2024

தீவிபத்தில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியில் மரப்பட்டறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. முரளி என்பவருக்குச் சொந்தமான அந்த பட்டறையில் நேற்று மரத்தூளை பைகளில் அடைக்கும் பணியின்போது தீ விபத்து நேரிட்டது. இதில் ராஜ்பவன் என்ற ஒடிஷா மாநிலத் தொழிலாளியும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது மகனும் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அங்கித் பரிதாபமாக இன்று உயிரிழந்தான்.

News August 23, 2024

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் நிவாரண நிதி வழங்கிய விவசாயி மகள்

image

காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே கன்னிகுளம் ஊராட்சியை சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம். இவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் தனது சிறு சேமிப்பு பணமான ரூ.500-யை வயநாடு நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இடம் அளித்தார். சிறிய வயதில் பெரிய மனது கொண்ட இச்சிறுமியின் இச்செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

News August 23, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2025 பணிகள் 20.08.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும் போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

கோவிந்தவாடியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கி கிராமப்புற பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மந்தைவெளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27.08.24 -ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனுஅளித்து பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

பொதுமக்களிடம் மனுக்களை பெறவுள்ளார் அமைச்சர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 27.08.24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

தாயார்குளம் மரப்பட்டறை தீ விபத்தில் குழந்தை பலி

image

காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே தனியார் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இன்று காலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் மர இழைப்பு பட்டறையில் பணி செய்து கொண்டிருந்த போது அங்கு இருந்த பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வடமாநில தொழிலாளி ராஜ்பவன்(22), அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இருவரும் தீ விபத்தில் சிக்கினர்.

News August 23, 2024

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனி, அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), மரு.கோபிநாத், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில், முதன்மைக் கல்வி அலுவலர் உடன் இருந்தனர்.

News August 23, 2024

காஞ்சிபுரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்

image

காஞ்சிபுரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் இவைகள் தான். ஏகாம்பரேஸ்வர் கோயில், காமாட்சியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், காஞ்சி காமகோடி பீடம், காஞ்சி குடில், தென்னங்கூர் பாண்டுரங்க கோவில், ஜெயின் கோவில்கள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என முக்கிய சுற்றுலாத் தலங்களையும், திருத்தலங்களும் காஞ்சிபுரத்தில் உள்ளன.

error: Content is protected !!