Kanchipuram

News August 28, 2024

காஞ்சி முன்னாள் திமுக செயலர் மறை: அமைச்சர் உதயநிதி அஞ்சலி

image

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.சண்முகம் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது திருவுருடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.

News August 28, 2024

காஞ்சி முன்னாள் திமுக செயலர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

image

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளராகவும் ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், கண்டோன் மெண்ட் துணைத் தலைவராகவும் இருந்து திறம்பட மக்கள் பணியாற்றிய கண்டோன்மெண்ட் சி.சண்முகம் (83) இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவையொட்டி திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

News August 28, 2024

பேட்டரி லைட் வெளிச்சத்தில் படித்த சிறுமி வைரல்

image

காஞ்சி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு சிறுமி பேட்டரி லைட் வெளிச்சத்தின் உதவியுடன் மருத்துவமனை வெளியே படித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்காக காத்திருந்தபோது, தனது படிப்பைத் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News August 28, 2024

அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைந்த செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநகராட்சி கூட்டம் கட்டாயம் நடக்கும் என காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

விநாயகர் சிலைகளை கரைக்க இரு இடங்களில் அனுமதி

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியாக கொண்டாடவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும், விழாக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிரம் மாவட்டத்தில் உள்ள பொன்னேரிக்கரை ஏரியிலும், சர்வதீர்த்த குளம் என இரு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 28, 2024

அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைந்த செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநகராட்சி கூட்டம் கட்டாயம் நடக்கும் என காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி ஒருவர் பலி

image

ஒரகடம் நெடுஞ்சாலையில், சரக்கு வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சாலையோரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, தனியார் தொழிற்சாலை பேருந்து பின்புறம் மோதியது. இதில், பேருந்தில் பயணித்த வடமாநில இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 28, 2024

காஞ்சிபுரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள்.

News August 28, 2024

இன்று உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

image

உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம், இன்று காலை 10.30 மணி – 11.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மோ.அன்பரசன், இந்து சமய அறநிலை துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கோயில், 108 திவ்ய தேசங்களில் 54ஆவது திருத்தலமாகவும், ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களும் உள்ளது.

News August 27, 2024

விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உடனிருந்தனர்.

error: Content is protected !!