India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் திமுக அயலக பிரிவில் பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், இன்று காலை வயல்வெளிக்கு செல்லும் பகுதியில் கோவில் அருகே உள்ள பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உத்திரமேரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி கோமதி(35). இவர், அதேப் பகுதியில் ஜல்லி கற்கள் அரைக்கும் கிரஷர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல அவர் அங்கு பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு சாவடி மையம் இடமாற்றம், புதிய வாக்கு சாவடிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் மற்றும் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பணி ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்த வழக்கில், கடந்த 24ஆம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளையாபதியை சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி, அந்தப் பொறுப்பை கருணாகரனுக்கு வைகோ வழங்கியுள்ளார்.
ஒரகடம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் தனியார் கேன்டீன் ஒன்று உள்ளது. இதற்கு சொந்தமான குட்டி யானை வாகனத்தில், தொழிலாளர்கள் நேற்று ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே மேட்டுப்பாளையம் சென்றனர். மாத்துார் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று கேன்டீன் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், டிரைவர் ஜன்டு மண்டல் உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பரந்தூரில், பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்காக, ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளன. இதனை எதிர்த்து, நேற்று பரந்தூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை, ரெயின் கோட்டுடன் செல்லுங்கள். மழை பெய்யுமா? பெய்யாதா?
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.83,72,350 செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 325 கிராம்,வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன.கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன்,கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று மதியம் 12 மணியளவில் காஞ்சி அரசு பேருந்து கழக ஊழியர்களின் சங்கம் சார்பில் 23ஆவது பேரவை மாநாடு ஓ ஓரிக்கை மிலிட்டரி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓரிகை பணி மனை அருகில் தொழிற்சங்கம் சார்பில் அனைவரும் சேர்ந்து 2023ஆண்டு பணியில் ஓட்டுனர்களை நிரந்தரம் செய்யவும், பட்ஜெட்டில் அரசு பேருந்து உயிர்களின் வரவுக்கு மேல் செலவு சரி செய்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி 23வது வட்டக் கழகம் சார்பில் கழக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் விழா மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, கிழக்கு பகுதி மாநகர செயலாளர்கள் பாலாஜி, ஜெயராஜ் உள்ளிட்ட அதிமுக மாவட்ட மாநகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.