India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு சமூக நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றிய 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-இல் மாநில அரசு ரூ.1,00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20/11/24 மாலை 5:45 க்குள் மாவட்ட சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில், 11 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப மாவட்ட நலச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை செப்.12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் தொடர்பான தங்களது குறைகள் குறித்த மனுவை, வரும் செப்.17ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அக்.4ஆம் தேதி நடைபெறவுள்ள குறைதீர் கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சங்கம் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்கலாம். மேலும், முறையீட்டு மனுக்கள் மீதான குறைகளை, கூட்டம் நடைபெறும் நாளில் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதீர்த்த குளத்தில், ஆண் சடலம் ஒன்று நேற்று மிதந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் விசாரனை செய்ததில், அவர் காஞ்சிபுரம் திருப்புக்கூடல் தெருவைச் சேர்ந்த ராஜசங்கர்(47) என்பது தெரியவந்தது. அவர், படாளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கீதாவின் சகோதரர் என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரசு விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.6000/- வழங்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் மட்டும் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களில் காஞ்சிரம் மாவட்ட ஆட்சியருக்கு 17ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 11 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக பணி நியமனம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், https://kancheepuram.nic.in என்ற இனையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 12.09.2024 க்குள் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றி வந்த நீச்சல் வீரரான ஆனந்தன் கடந்த 2012 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்து காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர், கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டு பொறுப்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார்.
உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் திமுக அயலக பிரிவில் பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், இன்று காலை வயல்வெளிக்கு செல்லும் பகுதியில் கோவில் அருகே உள்ள பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உத்திரமேரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.