Kanchipuram

News September 1, 2024

கொலை வழக்கு குற்றவாளிக்கு சிகிச்சை

image

காஞ்சிபுரம், காலண்டர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி(62). ஓய்வு பெற்ற காவலரான இவரை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே வளையாபதி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய பிரபு என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பிரபு படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார், அவரை ஏற்கனவே கைது செய்து தாக்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

News September 1, 2024

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு

image

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க

News August 31, 2024

காஞ்சியில் பிரமாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. ஆலந்தூர் நீதிமன்றம் அருகே நாளை அதிகாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள இப்போட்டியை மாவட்ட மருத்துவர் அணியின் தலைவர் கிருத்திகாதேவி தலைமை தாங்குகிறார். போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்து பரிசளிக்க உள்ளார்.

News August 31, 2024

மானிய விலை சிலிண்டரை வணிகத்தில் பயன்படுத்த தடை

image

காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை அலுவலர் ஆகியோர் தலைமையில், இன்று திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 27 இடங்களில் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட 35 வீட்டு உபயோக சிலிண்டர்களை காஞ்சி மாவட்ட ஆட்சியர் பறிமுதல் செய்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

News August 31, 2024

காஞ்சியில் 3 மூட்டை போதைப்பொருட்கள் பறிமுதல்

image

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர் அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளைகேட் பகுதி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 3 மூட்டை போதைப்பொருட்கள் பிடிபட்டது. இதனை கடத்தி கொண்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரை காவல்துறையினரால் கைது செய்தனர்.

News August 31, 2024

நெல் முளைக்காமல் இருக்க பாதுகாக்க வேண்டும்

image

காஞ்சி மாவட்டத்தில் அண்மையில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவமழை காலம் வரவுள்ளதால் நெல்லின் ஈரத்தன்மை அறிந்து நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் நெல்மணிகள் முளைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலதாமதம் இன்றி பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

News August 31, 2024

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது

image

காஞ்சிபுரம், காலண்டர் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரி(62) சமீபத்தில் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை கொலை வழக்காக விசாரித்த போலீசார், இதில் தொடர்புடையதாக கூறி, முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News August 31, 2024

வன்கொடுமை கண்காணிப்பு குழுவிற்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் வன்கொடுமை தடுப்பு, கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு ஆகிய குழுக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. எனவே புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்டு, சமூக அக்கறை கொண்ட விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்.6ஆம் தேதி ஆகும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திருக்கும் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்

News August 30, 2024

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் வளையாபதி கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி, காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கருணாகரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று விடுத்த அறிக்கையில், ‘காஞ்சிபுரம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட மதிமுக ஒன்றாக இணைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டமாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!