India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி, பயிலும் ஷெர்லி என்ற மாணவி நேற்றிரவு 5ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மாணவி காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவருடைய தாயாரும் அவருடன் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் செப்.6ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், தமிழக அரசின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. அங்கு, அனுமந்தபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோதண்டன்(52), துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகே கிடந்த ராக்கெட் லாஞ்சரை எடுத்து அதை உடைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ராக்கெட் லாஞ்சர் வெடித்து சிதறியது. இதில், பலத்த காயம் அடைந்த கோதண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செப்டம்பர் 14 கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சியில் தேமுதிக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவராத்திரி முன்னிட்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. செப் 21 முதல் அக் 6 வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மகளிர் குழு இக்கண்காட்சியில் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழுக்கள் கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் வரும் செப் 15 தேதிக்குள் http//exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் அடையாறு கால்வாய் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்துச் சென்று கடலில் கலக்கும். பல நூறு கன அடி உபரி நீர் அடையாறு கால்வாயில் செல்லும் பொழுது கால்வாயை ஒட்டியுள்ள மணிமங்கலம் முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
மதுராந்தகத்தில், புதிய பேருந்து நிலையம் கட்ட கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது 40 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் மதுராந்தகம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைப்படி பேருந்து நிலையத்தில் கூடுதலாக கடைகள் அமைக்க ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவான மோகன்குமாரை, தனிப்படை போலீசார் 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர். இவர், வந்தவாசி, மேல்மருவத்தூர், மதுராந்தகம் உள்ளிட்ட அரசு மதுக்கடைகளில் சுவர்களை துளையிட்டு திருடியதும், இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர், போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு, யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் பெற முடிவெடுத்துள்ள தொல்லியல் துறை, இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும், கைலாசநாதர் கோயில் வளாகத்தில், சுத்திகரிப்பு குடிநீர், நடைபாதை, புல்வெளி, நவீன கழிப்பறைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை, தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., திட்டத்தில் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், காலண்டர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி(62). ஓய்வு பெற்ற காவலரான இவரை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே வளையாபதி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய பிரபு என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பிரபு படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார், அவரை ஏற்கனவே கைது செய்து தாக்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.