India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
படப்பை அடுத்த ஆதனுார் மகாலட்சுமி நகரில் உள்ள சாலையோர கிணற்றில், இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் ஆதனுார் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர்(27) என்பதும், இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலடித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புக்கரசி(37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று பிற்பகல் சுமார் 12 மணிக்கு, கணவர் லோகநாதனுடன் பைக்கில் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அய்யம்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி பைக் மீது உரசியதில் அன்புகரசி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை துளசிமதி பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். வெள்ளி வென்ற துளசிமதிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமதிக்கு அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும், உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில், பேட்மின்ட்டன் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவி துளசிமதி(22) காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ஆவார். கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார். துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. இவரது தந்தை தான் துளசிக்கு பயிற்சியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் பிரியா தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைக்கு மருத்துவ உதவி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குழந்தை பிறப்பின்போது இடது பக்க மூளையில் ரத்தக் கசிவு உள்ளதால், வலது புறம் கால் செயல் இழந்து உள்ளதாக மருத்துவர் தெரிவித்த நிலையில், குழந்தையை காப்பாற்ற குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவ உதவிக்காக மனு அளித்தனர்.
செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் மூலம் சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. தற்போது 4.88 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 3.6 டி.எம்.சி. கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசி மதி என்ற மாணவி மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யங்கை எதிர்த்து இன்று இரவு 8 மணிக்கு மோதுகிறார். ஏற்கனவே வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில் இந்த போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கத்தை காஞ்சியை சேர்ந்த மாணவி பெற்றுத்தருவார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வரும் செப்.5,6 -ஆம் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி. பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரை இறுதியில் மனிஷா ராமதாஸை 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. வரும் செப்.17ஆம் தேதிக்குள் பெறப்படும் முறையீடுகள் மீது மட்டுமே, அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே, வரும் 17ஆம் தேதி க்குள் ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.