India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூர் பொது அரசு மருத்துவமனையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுதழ் வழங்கப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார். உடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் இயல்பாக உள்ள மாற்றுத்திறனாளிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவர் சான்று, ஆதார், UDID, குடும்ப அட்டை, புகைப்படம், பழைய RC புத்தகத்தின் நகலுடன் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து கட்சியினர் சார்பிலும் ஒவ்வொரு கட்சியினரும் வரைவு வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுக் கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு இன்று அக்.29ஆம் தேதி 12:30 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 10.30 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு இன்று (29-10-24) 12:30 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (28.10.2024) மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் இன்று பொதுமக்களிடம் இருந்து 353 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் பொது பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார். திறந்த வெளியில் மட்டுமே வெடிக்கவும், குழந்தைகளைப் பெரியவர்கள் கண்காணிக்கவும், பருத்திய உடை அணியவும். தீ விபத்து ஏற்படாதவாறு அருகில் நீர், மணல் வைத்திருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார நிலையத்துக்குச் செல்லவும் என்று தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் மற்றும் 12ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (28.10.2024) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய மின்னணு நகல் குடும்ப அட்டை வேண்டி அளிக்கப்பட்ட மனு மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய மின்னணு நகல் குடும்ப அட்டையை, ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.