Kanchipuram

News September 3, 2024

கண் தானத்தில் உலகிலேயே 2வது இடத்தில் இந்தியா

image

உலக அளவில் கண் தானத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், மேலும் முதலிடத்தில் வர அதிக அளவில் கண் தானம் செய்ய வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது கண் தானம் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் பல்வேறு சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News September 3, 2024

அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதானை படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துளசிமதி, “இந்தப் போட்டியில் சீனாவின் யங்கை தோற்கடித்து தங்கம் வெல்வதே குறிக்கோளாக இருந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்” என உறுதி கூறினார்.

News September 3, 2024

காஞ்சியில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த 33 கவுன்சிலர்கள் அறிஞர் அண்ணா கூட்டரங்கு நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் எதிர்ப்பை மீறி 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 18 கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 3, 2024

துளசிமதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை துளசிமதி, பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இறுதி சுற்றில் தோல்வியடைந்தார். இருப்பினும், வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி பதக்கம் வென்ற துளசிமதிக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

News September 3, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது

image

காஞ்சிபுரம் மாநகராட்சி கூடம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. சுமார் 8 மாதங்கள் கழித்து இன்று, காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் தொடங்கியது, இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அண்மையில், மேயருக்கு எதிராக, அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய நிலையில், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

News September 3, 2024

60 தொழிற்சாலைகள் மூடல்: ரூ.6.70 கோடி அபராதம்

image

கடந்த 5 ஆண்டுகளில், காஞ்சிபுரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 60 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 தொழிற்சாலைகளுக்கு, ரூ.6.70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சடலமாக மீட்பு

image

படப்பை அடுத்த ஆதனுார் மகாலட்சுமி நகரில் உள்ள சாலையோர கிணற்றில், இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் ஆதனுார் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர்(27) என்பதும், இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

News September 3, 2024

அய்யம்பேட்டை சாலை விபத்தில் பெண் பலி

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலடித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புக்கரசி(37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று பிற்பகல் சுமார் 12 மணிக்கு, கணவர் லோகநாதனுடன் பைக்கில் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அய்யம்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி பைக் மீது உரசியதில் அன்புகரசி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 3, 2024

வெள்ளி வென்ற துளசிமதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை துளசிமதி பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். வெள்ளி வென்ற துளசிமதிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமதிக்கு அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும், உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

வீடு முழுவதும் பதக்கங்களைக் குவித்த வீராங்கனை

image

பாரா ஒலிம்பிக் போட்டியில், பேட்மின்ட்டன் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவி துளசிமதி(22) காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ஆவார். கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார். துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. இவரது தந்தை தான் துளசிக்கு பயிற்சியளித்துள்ளார்.

error: Content is protected !!