India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் 750 ரூபாய் கல்வி உதவித்தொகை , இலவச மிதிவண்டி ,சீருடை, பயிற்சி கட்டணம் இல்லை, இலவச பேருந்து பயணம் என பல சலுகைகள் உள்ளது.
காஞ்சிபுரத்தில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <
விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு ) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <
இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விஷ்ணு திருமண மண்டபம், காஞ்சிபுரம் அருகே உள்ள ARC திருமண மண்டபம், உத்திரமேரூர் அருகே உள்ள கலைஞர் நூலகம், குன்றத்தூர் அருகே உள்ள வைப்பூர் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுங்குவார்ச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா? என கமெண்டில் சொல்லுங்க
காஞ்சிபுரம் மாவட்டத் தலைமையிடத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை dipr.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து 10.08.2025-க்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பின்படி, நாளை (ஆகஸ்ட் 5) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் வார்டு எண் 24, 25, திருப்பெரும்புதூர் நகராட்சி வார்டு எண் 2, 4, குன்றத்தூர் ஒன்றியத்தில் வைப்பூர் ஊராட்சி மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பாண்டவதூதப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான கிருஷ்ணர் சுமார் 25 அடி உயரத்தில், அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். புதிய தொழில் தொடங்குபவர்கள், பணியிடத்தில் முன்னேற்றம் விரும்புபவர்கள்,எந்த தடைகளும் இல்லாமல் இருக்க இங்கு வேண்டி கொள்கிறார்கள். ஷேர் பண்ணுங்க மக்களே!
Sorry, no posts matched your criteria.