Kanchipuram

News September 24, 2024

பண்ருட்டி ஏரிக்கரையில் 15,000 பனை விதைகள் நடவு

image

விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஏரிக்கரையில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு பனை விதை நடவு செய்யும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆதி கல்லுாரி என்.எஸ்.எஸ் மாணவர்கள், என்.எல்.சி ஓய்வுபெற்ற பொறியாளர்கள், ஒரகடம் தொழில் நகர அரிமா சங்கத்தினர், விதைகள் தன்னார்வ அமைப்பினர், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து 15,000 பனை விதைகளை நடவு செய்தனர்.

News September 24, 2024

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

image

வாலாஜாபாத் அருகே, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, களியனூர் கிராமத்தில் சிலர் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை, போலீசார் கையும் களவுமாக விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதேபோல், அய்யம்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இரவு நேரத்தில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

News September 24, 2024

அமைச்சர் அன்பரசன் பங்கேற்கும் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனுக்களை பெற உள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 24, 2024

திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

image

சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண் இயக்குநர் க.சு.கந்தசாமி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான், காஞ்சிபுரத்தை கண்காணிக்க உள்ளார்.

News September 23, 2024

அமைச்சர் தலைமையில் நாளை குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில், நாளை காலை 11 மணிக்கு அமைச்சர் அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், புகார், கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

News September 23, 2024

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (23.09.2024) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். இதில் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

News September 23, 2024

15ஆவது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தொழிலாளர்களை வஞ்சிப்பதாக தெரிவித்து, சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News September 23, 2024

பைக் மீது கார் மோதி பெண் உயிரிழப்பு

image

வந்தவாசி அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி(38). இவா் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காய்கறி வாங்கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, விளாங்காடு கூட்டுச்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த காா் ஒன்று இவரது பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தாா்.

News September 23, 2024

சாம்சங் ஊழியர்கள் 13ஆவது நாளாக போராட்டம்

image

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 மணி நேர வேலை, சி.ஐ.டி.யு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்று வருகிறது. பணிக்கு திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் எச்சரித்திருந்த நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

News September 23, 2024

மின் தொழிலாளர்கள் நலச்சங்க பதவியேற்பு விழா

image

காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர், துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், சட்ட ஆலோசகரும், நோட்டரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரசு, முன்னாள் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி அருளானந்தம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்தனர்.

error: Content is protected !!