India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுளள்ளார்.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மொத்தம் 109 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே காஞ்சிபுரம்-34, ஸ்ரீபெரும்புதூர்-8, உத்திரமேரூர்-31, வாலாஜாபாத்-19, குன்றத்தூர்-17ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8-1ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6ம் தேதிக்குள் நடைபெறும். அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரம், தமிழக முதல்வர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் என ஐந்து பிரிவுகளில் 25 விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடைபெறும். மண்டலத்தில் 7, மாநிலத்தில் 37 விளையாட்டுகள் போட்டிகள் நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான QR குறியீட்டை கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டார்.
காஞ்சிபுரத்தில் நாளை (ஆக.6) காஞ்சிபுரம், குன்றத்தூர், திருப்பெரும்புதூர், குன்றத்தூர் (URBAN) ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு https://tamilvalarchithurai.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.