India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரிய கொளுத்துவான்சேரி, அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்த நிக்கில் ஜான்(35), சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாநகர கிழக்கு பகுதி செயலாளரும், காஞ்சிபுரம் நகர வங்கியின் முன்னாள் தலைவருமான பாலாஜி, அவரது பிறந்தநாளை ஒட்டி, அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் காஞ்சிபுரம் அதிமுக மாநகர நிர்வாகிகள் இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் உற்சவ சிலையான 1000 ஆண்டு பழமையான சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்த நிலையில், அதனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் செல்போன்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் சார்ந்து, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 92 ஏரிகளில் 80 ஏரிகளுக்கான சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்தும், மீதமுள்ள 12 ஏரிகளுக்கான சங்க தேர்தல் நேற்று போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நாளை (அக்.2) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளன. இதில் துாய்மையான குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கு வெளியே, காவித்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி(60) என்ற பெண் பெட்ரோல் பாட்டிலுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தடுத்து விசாரித்த போது, மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த தங்களுக்கு பட்டா வழங்கியும் ஊர் தலைவர் வீடு கட்ட அனுமதிப்பதில்லை என குற்றம்சாட்டினார். இதுகுறித்து, தாசில்தார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறிதியளித்த பின்னர் அங்கிருந்து சென்றார்.
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சாம்சங் தொழிலாளர்கள், சிஐடியு சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு, 8 மணி நேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், இன்று காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,
பீகாரைச் சேர்ந்த ஹரி காந்தராய்(42), ஒரகடத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, ஒரகடத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வேனில் புறப்பட்ட இவர், பனப்பாக்கம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, லாரி ஒன்று வேன் மீது மோதியது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் உயிர்சேதம் இல்லை. இதனால் கடு , கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படப்பை அடுத்த வஞ்சிவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). இவர், அதேப் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 21.50 மணிக்கு பணி முடித்துவிட்டு, அதேப் பகுதியில் உள்ள சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.