India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழம்பி, அமராவதிபட்டிணத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(32). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் ஒலிமுகமதுபேட்டையில் இருந்து கீழம்பி நோக்கி தனது ஜாவா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில், மோகன்ராஜ் உயிரிழந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார் மோகன்ராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
தமிழ் அறிஞர்கள் அரசு உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchiththut.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வரும் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம்.
பெரிய பனிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(36). இவர், கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திவாகர்(35), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த திவாகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷின் காதில் வெட்டியதில், பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனார்.
வரதராஜபுரம் ஊராட்சியில் இன்று (02.10.2024) அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் உடன் இருந்தனர்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை., மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா பல்கலையில் நேற்று நடந்தது. இதில், பல்கலை., துணைவேந்தர் சீனிவாசு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஓரிக்கை, தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(34). காஞ்சிபுரம் சர்வே துறை ஆய்வாளரான இவருக்கு, அப்பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணின் இரு குழந்தைகளை கடந்த செப்.28இல் தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதில் உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் ராஜேஷை நேற்று கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேரடியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 900 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும் இஞ்சி அதிகளவு பயிரிடப்படுகிறது. காஞ்சிபுரம் சந்தைகளில் இரு மாதங்களுக்கு முன், 1 கிலோ இஞ்சி அதிகபட்சமாக ரூ.250 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் இஞ்சி அறுவடை தொடங்கி, வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரத்தில் 1 கிலோ இஞ்சி ரூ.60க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள், கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதால், பொதுமக்கள் அவரவரே பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உள்ள வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி, உற்சவமூர்த்தியான முருகர் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில் தோகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.