India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-2023 ஆகிய இரு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, புத்தக திருவிழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக 2024ஆம் ஆண்டிலும் புத்தக திருவிழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப வரும் டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறை காலத்தில் புத்தக திருவிழா நடத்த மாவட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று, பசுமை விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏகனாபுரத்தில் 800ஆவது நாளாக போராட்டம் நடத்தினர். மேலும், விமான நிலையம் வேண்டாம் என 9ஆவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தொடர் போராட்டத்திற்கு, திரைப்பட இயக்குநர் கௌதமன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 2015ஆம் ஆண்டில் செய்யப்பட்ட உற்சவர் சிலையில் மோசடி நடந்ததால், அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். 2017ஆம் ஆண்டில், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. எனவே, விரைவில் விசாரணை தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உரிமம் பெற கடை அமையும் இடத்தின் வரைபடம் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்கள் வாயிலாக இணையவழியில் வரும் அக்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின், விசாரணைக்குட்படுத்தப்பட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் தற்காலிக உரிமத்தின் உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை ஒருசில வியாபாரிகள் வாங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும், புகார் கொடுத்தால் உடனடியாக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரத்தில், செப்டம்பர் மாதத்தோடு தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், நடப்பாண்டில் இயல்பைவிட 35% மழைப்பதிவு கூடுதலாக பதிவாகியுள்ளது. அதாவது, காஞ்சிபுரத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை 47.2 செ.மீ. மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால், 35% கூடுதலாக பெய்து 63.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக மழை பெய்திருப்பதால் காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் 15.10.2024க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உத்திரமேரூர் அருகே குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான லோகநாதன், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 3 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து, ஜனாதிபதியிடம் விருது வாங்கினார். இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்று, ஊருக்கு திரும்பிய லோகநாதனுக்கு, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடிகர் சரவணன், மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்து பிரசாதங்களை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒன்றியம் காலூர் ஊராட்சியில் விலிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இன்று (03.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.