Kanchipuram

News November 2, 2024

காமாட்சி அம்மன் தங்க தேர் உற்சவம்

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இரவு 8:15 மணிக்கு தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் காட்சி அளித்தார். பக்தர்கள் தங்கதேரை இழுத்து பக்தி பரவசமாக தரிசித்தனர். உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். வானவேடிக்கை வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

கோயில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை

image

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோலியில், திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், நடப்பு ஆண்டு கந்தசஷ்டி சூராசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது. இருப்பினும், கந்தசஷ்டி விழாவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுவதால், பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை என காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

17,000 கிலோ பட்டாசு கழிவுகள் அகற்றம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் நேற்று முன்தினம் தீபாவளியன்று பட்டாசு கழிவுகள் ஏராளமாக சேர்ந்தன. இவற்றை, தீபாவளியன்று காலை முதல் நேற்று மாலை வரை என இரு நாட்கள் தொடர்ந்து அகற்றப்பட்டன. அவ்வாறு, தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 6,000 கிலோ பட்டாசு கழிவுகளும், நேற்று 11,000 கிலோ என மொத்தம் 17,000 கிலோ பட்டாசு கழிவுகள் நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் தனியாக குவிக்கப்பட்டுள்ளன.

News November 2, 2024

தீபாவளியன்று 6 தீ விபத்து: உயிரிழப்பு இல்லை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முந்தினம் தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க, தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். வாலாஜாபாத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும், கீழ்கதிர்பூர் கிராமத்தில் வைக்கோல் போரும் உள்ளிட்ட 6 இடங்களில் தீ விபத்துகள் நடந்ததாகவும், அதில் யாருக்கும் காயம் மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

பாலசுப்பிரமணியசுவாமி கோயில் பந்தக்கால் நடும் விழா

image

காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று காலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பாக குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

News November 1, 2024

காஞ்சிபுரம் டாஸ்மாக்கில் ரூ.3 கோடிக்கு மேல் வசூல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மது பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அதிகமான அளவில் மது வாங்கிச் சென்றனர். மேலும், கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு வசூல் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

காஞ்சிபுரத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

News November 1, 2024

50,000 சரவெடியுடன் காமாட்சி அம்மன் வீதியுலா 

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 50,000 சரவெடி வெடிக்க லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News November 1, 2024

இந்த தீபாவளிக்கு உங்களை மகிழ்வித்தது எது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது