India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரித்து திறந்தவெளி வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த தகவலை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். க.செல்வம்-திமுக(உதயசூரியன்), பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை) மேற்கண்ட இவர்கள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்
மதுராந்தகம் தாலுகா பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாவூத்(42). இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த
மேவளூர்குப்பம் பகுதியில் வசித்துக் கொண்டு வெல்கம் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் தாவூத் மனைவியான நூர்ஜஹானுக்கு வீடியோ கால் மூலம் போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அம்பத்தூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 13 வேட்பாளர் தேர்வு செய்தனர் அதில் 2 வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 11 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு, அதில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் உடன் திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட 5 பிரதான கட்சிகள் போட்டியிடுகிறது.
காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல சீரியல் நடிகைக்கு சிறப்பான வரவேற்பும் கோவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ஏராளமான குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகியோரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 3 மற்றும் 4 ஆம் தேதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வி.என். வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தோழமை கட்சிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஶ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வருகை புரிந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “பொருளாதரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு வந்துள்ளது; இதுதான் பாஜகவின் வளர்ச்சி; சொத்துவரி, பால் வரி என அனைத்தையும் அதிகரித்துதான் திமுகவின் சாதனை; பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவில்லை என பேசி வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செவிலிமேடு அருகே, காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வத்திற்கு வாக்களிக்கும்படி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நேற்று(மார்ச் 28) பிரச்சாரம் செய்தார். அப்போது, பொதுமக்களை கவரும் வகையில் சாலை ஓரம் இருந்த தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர்களுக்கு முட்டை மற்றும் தோசை ஊற்றி கொடுத்து வாக்கு கேட்டார்.
Sorry, no posts matched your criteria.