India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் நேற்று(ஏப்.3) போலீசார் கைது செய்துள்ளனர். செவிலிமேடு அருகே பிரபல தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்ப்பவர் காமேஷ்(42). இவர் மாணவர் ஒருவருக்கு போனில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் காஞ்சி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கிளேரா பீட்டர் கடந்த வாரம் நேபாளத்தில் நடைபெற்ற பேரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வருகை தந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிராமம் முழுவதும் மாட்டு வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உடன் இருந்தனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பி.ஆர்.பாலகிருஷ்ணன்(ஐ.டி. – ஓய்வு) தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ அல்லது பொது மக்களோ தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 93452 98218 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் மே 20ம் தேதி தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் இன்று(ஏப்.2) அறிவித்துள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் 22ம் தேதி காலையும், திருத்தேர் உற்சவம் 26ம் தேதியும் நடைபெறுகிறது.
ஶ்ரீபெரும்புதூர் அருகே சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). இவர் தனது மனைவி, பேரனுடன் தனது இருசக்கர வாகனத்தில் சிவன்தாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய மாஜி அமைச்சர் வளர்மதி தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை, பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது”என இன்று விமர்சித்துள்ளார்.
விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டுச்செல்லும் அரசு பேருந்துகளில் தற்போது, ‘ஆன்லைன்’ வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்புதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.