India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் பேரிடர் காலங்களில் பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும்,தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல் குறித்த புகார் தெரிவிக்க 044-27237107 எண்ணை அழைக்கலாம். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ள Social Media Pages: Twitter : @KanchiCollector @DDMAKANCHIPURAM, Facebook – @kanchicolltr, Instagram – @kanchicolltr, Alerts & Advisories – TN-ALERT ஆகிய வலைதளங்களில் அணுகலாம்
காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் பேரிடர் காலங்களில் (ம) பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044 27237107 மற்றும் வாட்ஸ்அப் எண் 8056221077 போன்ற எண்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்தார்.
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.18ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விடுமுறை இருக்கக்கூடும் என எதிர்பார்த்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாளை காஞ்சிபுரத்திற்கு கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, மாவட்டத்தில், 72 வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் 11 துறை அதிகாரிகள் கொண்ட 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ள பாதிப்புகள் பற்றி 044-27237107 என்ற தொலைபேசி எண்ணிலும், 80562 21077 என்ற மொபைல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பிஸ்கட் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருங்கள். மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, குடிநீர், மருந்து மாத்திரைகள் சேமித்துக் கொள்ளுங்கள். கைபேசிகள், லேப்டாப், பவர் பேங்க் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து, கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜே.ஜே நகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம்தண்டலம் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.15) காலை 9 முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
பரந்தூர், ஏகனாபுரம் கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளில், விமான நிலையம் அமைக்க தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்படும் கிராமங்களான ஏகனாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கருப்பு கொடியை வீட்டு முன்பு ஏற்றி உள்ளனர். மேலும், நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 27ஆம் தேதி விக்ரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகர பொறுப்பாளராக விஜய் மக்கள் இயக்கத்தின் நகர செயலாளர் பிரபு என்பவர் நியமனம் செய்து அக்கட்சி அறிவித்துள்ளது. அவருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று (அக்.14) மாலை 4 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், விசிக தலைவர் திருமாவளவன், காங்., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.