India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, வேலுார் உள்ளிட்ட வெளியூர்களில் பணிபுரிபவர்கள், தீபாவளி தொடர் விடுமுறைக்கு காஞ்சிபுரம் வந்தனர். விடுமுறை முடிந்து, பணிபுரியும் ஊருக்கு செல்ல நேற்று பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் நேற்று மாலையில் இருந்தே பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளியையொட்டி காஞ்சிபுரம் சார்பில் கூடுதலாக சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில், 28 பேருந்துகளை கூடுதலாக இயக்கப்பட்டது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. நாளை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக செயற்குழுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து நீர் நிலங்களை அழித்து கொண்டுவரப்படும் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதை வரவேற்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டது
பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பாபு திரையரங்கம், கார்த்திகேயன் திரையரங்கம், அருணா திரையரங்கம் ஆகியவற்றிற்கு வாகனம் மூலம் வரும் பொதுமக்களுக்கு 3 மணி நேரம் பார்க்கிங் விடுகின்றன. திரையரங்க நிர்வாகங்கள் பார்க்கிங் கட்டணத்தை 50% உயர்த்தி 3 மணி நேரத்திற்கு ரூ.15 என வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுதும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் 13 பேர் மாற்றப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அமைச்சர் அன்பரசன், மாதம் 2 முறை குறைதீர் கூட்டம் நடத்தி வந்தார். சமீபத்தில் செங்கல்பட்டில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆனால் காஞ்சிபுரத்தில் நடத்துவது பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்கள் கருத்து?
காஞ்சிபுரத்தில் இன்று (நவ.3) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. வெளியே செல்பவர்கள் குடை எடுத்துச் செல்லுங்கள்.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த டெல்லி பாபு (19), சேலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் தனது நண்பன் ஹரியின் பைக்கை எடுத்துக் கொண்டு எருமையூரில் நேற்று மாலை போட்டோசூட் எடுக்கச் சென்றார். அப்போது, பூந்தமல்லியைச் சேர்ந்த தேஜாஸ் (18) என்பவர் வந்த பைக், பாபு பைக் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, உறவினர்கள் காஞ்சிபுரம் மேல்ஓட்டிவாக்கம்,கூத்திரம் மேடு பகுதியில் இருந்து மினி லாரி மூலம் சென்றுள்ளனர். அப்போது தாமல் அருகே மினி லாரியின் டயர் வெடித்ததால் லாரி கவிழ்ந்தது. இந்த மினி லாரியில் பயணம் செய்த 28 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மினி லாரியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வயநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை நேற்று (02.11.2024) வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.