India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம் (மி.மீ.): காஞ்சிபுரத்தில் – 33 மில்லி மீட்டர், உத்திரமேரூர் – 24.4 மில்லி மீட்டர், வாலாஜாபாத் – 29 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் – 59.2 மில்லி மீட்டர், குன்றத்தூர் – 68.7 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் – 85 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக
49.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை ஓயும் வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட செய்தியில், “மழை பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம்தான் என்றாலும், மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது” என்றார்.
காஞ்சிபுரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பூக்களின் விலை சரிந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் கிலோ 500க்கு விற்ற முல்லைப்பூ இன்று 80 ரூபாய்க்கும், 800க்கு விற்ற மல்லிகைப்பூ 200க்கும், 240க்கு விற்ற பன்னீர் ரோஜா 60க்கும், 800க்கு விற்ற கனகாம்பரம் 200க்கும், 300க்கு விற்ற சம்பங்கி 60க்கும், 500க்கு விற்ற ஜாதிமல்லி 240க்கும் விற்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். நாளை காஞ்சிபுரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றது. சாம்சங் விவகாரத்தில் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 24.40 மி.மீ, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10.40 மி.மீ, வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் 22 மி.மீ, ஶ்ரீபெரும்பத்தூர் பகுதிகளில் 35.20 மி.மீ, குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 63.30 மி.மீ, செம்பரம்பாக்கம் பகுதிகளில் 70 மி.மீ என மொத்தம் 23.43 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சராசரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.90 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக நீர்பெருக்கு அதிகரிக்கும்போது பாம்பு மற்றும் இதர வன உயிரினங்கள் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் 24 மணி நேரமும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை (அக். 16) இயங்காது என அறிவிக்கப்ட்டுள்ளது. இதில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொழில் அமைதி, பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்;
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது; தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது நிர்வாகம் எழுத்துப் பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன் தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.