India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளயம்மன் கோயிலில் நேற்று(மே 8) சித்திரையை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு அங்காளயம்மன் சன்னதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிவப்பு சீலை கட்டிக் பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதியில் உள்ள முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் சட்டவிரோதமாக மின்மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றார். மேலும், கோடை காலத்தில் வறட்சியை தவிர்க்க சிக்கனமாக பயன்படுத்திட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 – பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் ஸ்வாயின்(21) வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று(மே 7) இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி ஸவாயின் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள், இன்று(மே 7) ஊர் திரும்பினர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பூங்கா எதிரே உள்ள விளையாட்டரங்கில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று(மே 6) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,680 மாணவர்கள், 6,733 மாணவிகள் என 12,413 பேர் தேர்வு எழுதிய நிலையில் பலர், பல பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் கணக்கு பாடத்தில் மட்டும் 39 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர், ஏகனாபுரம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைவதை எதிர்த்து 650 வது நாளாக இன்று இரவு நேரத்தில் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 – பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று (06.05.2024) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 12,541 பேர் முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 92.28% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.46% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் 30வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.