Kanchipuram

News March 29, 2025

காஞ்சிபுரம்: ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அடிக்கல் 

image

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இன்று (29.03.2025)  ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்/நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்ஃபோலியோ நீதிபதி) மாண்புமிகு திரு.நீதியரசர் கே.முரளிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்

News March 29, 2025

32 பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் பணி தீவிரம்

image

காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு, மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் 32 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 32 காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

News March 29, 2025

ஹீட்டர் போடும்போது கவனம்: உயிரே போய்விடும்

image

மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News March 29, 2025

நடந்து சென்றவர் மீது கார் மோதி உயிரிழப்பு

image

வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (57). கொத்தனாராக வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் (மார்.27) புளியம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து மாலை 6:30 மணிக்கு புளியம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

News March 29, 2025

ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 29, 2025

பங்குனி மாத வெள்ளிக்கிழமை தாயாருக்கு விசேஷ பூஜைகள்.

image

காஞ்சிபுரம் – திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் (28 மார்) வெள்ளிக்கிழமை மண்டல பூஜைகள் நடைபெற்று பங்குனி மாத வெள்ளிக்கிழமை தாயாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி மலர் அலங்காரங்கள் அர்ச்சனைகள் தீபா ஆராதனை நிகழ்வை தொடர்ந்து பிரசாதங்கள் வழங்க சுற்றுலா வாசிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News March 28, 2025

காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 6 அம்மன் கோயில்கள்

image

1.அகரம்தூளி கிராமம் இளங்காளியம்மன் கோயில்,
2.குன்றத்தூர் மாரியம்மன் கோயில்,
3.பருக்கல் பொன்னியம்மன் கோயில்,
4.சாலூர் எல்லையம்மன் கோயில்,
5.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்,
6.நெடுமரம் முத்தாலம்மன் கோயில். அம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை நீட்டிக்க மனு

image

பரந்துாரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் பெர்ரி முதல்வருக்கு நேற்று (மார்.27) மனு அனுப்பினார்.

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு <>ஏற்படுத்தி <<>>தரப்படும்.

error: Content is protected !!