Kanchipuram

News October 27, 2024

காஞ்சிபுரத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இன்று இயங்கும். தீபாவளி பண்டிகை வருகிற அக்.31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் நோக்கில் இன்று (அக்.27) ஞாயிற்றுக்கிழமை, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை இன்று வாங்கி கொள்ளுங்கள.

News October 27, 2024

காஞ்சி சார்பில் தவெக நிர்வாகிகளுக்கு உணவு

image

தவெக மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சி மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் தென்னரசு தலைமையில் நடைபெற்று வருகிறது.

News October 26, 2024

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்

image

காஞ்சிபுரத்துக்கு 53ஆவது அதிமுக பொன்விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக பொது செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மாநகரக் கிழக்கு செயலாளர் பாலாஜி, அமைப்பு செயலாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News October 26, 2024

ரயில் சேவைகளில் 2 நாட்களுக்கு மாற்றம்

image

மதுரையில் இருந்து இன்று (அக்.26) இரவு 11.35க்கு புறப்படவுள்ள (02121) ஜபல்பூர் சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் – பெரம்பூர் – கொருக்குப்பேட்டை தடத்தில் செல்லும். இந்த ரயில் நாளை (அக்.27) தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்காது. மதுரையில் இருந்து (அக்.27), 00.55க்கு கிளம்பும் சம்பர்க் கிரந்தி துரித ரயில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் வழியாக செல்லும்.

News October 26, 2024

சாலையில் தூங்கிய தொழிலாளர் மீது லாரி ஏறி பலி

image

திருச்சியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (48). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் உள்ளே படுத்தபோது காற்று வரவில்லை என்பதால் வெளியே சாலையில் படுத்தார். அப்போது, ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று இவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 26, 2024

சிப்காட் அமைக்க நிலம் வழங்க மாட்டோம்: விவசாயிகள்

image

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்குபெற்ற விவசாயிகள், “உத்திரமேரூர் அருகே உள்ள மருதம், திருப்புலிவனம், புத்தளி ஆகிய கிராமங்களில், புதிதாக சிப்காட் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சிப்காட் அமைக்க எங்களுடைய விவசாய நிலங்களை நாங்கள் வழங்க மாட்டோம், திட்டத்தை கைவிட வேண்டும்” என்றனர்.

News October 26, 2024

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று மாலை, அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்பு உரையாற்றுகிறார். இதில், தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அலைகடலென திரண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

News October 26, 2024

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி எண்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 26, 2024

காஞ்சிபுரத்திலிருந்து சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து

image

காஞ்சிபுரம் சிப்காட்டில் இருந்து திருநெல்வேலி காவல்கிணறு இஸ்ரோ மையத்திற்கு சென்ற மினி சரக்கு வாகனம் நாங்குநேரி மூன்றடைப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து வேன் மீது மோதியது, சரக்கு வாகனம் நொறுங்கியது. இதில் மினி சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்தனர்.

News October 25, 2024

EPS காஞ்சி வருகையை முன்னிட்டு பிரம்மாண்ட கட்-அவுட்கள்

image

காஞ்சிபுரத்தில் நாளை (அக்.26) நடைபெற உள்ள 53ஆவது அதிமுக துவக்க விழாவினை முன்னிட்டு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இந்நிலையில், மாநகராட்சி காந்தி ரோட்டில், தேரடி அருகே பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுவரொட்டிகள், பேனர்கள் வைத்து, அனைவரும் வர வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!